சுடச்சுட

  

  ஹிந்துத்வா இயக்கத் தலைவர்களை தொடர்ந்து திட்டமிட்டு படுகொலை செய்யும் பயங்கரவாதிகளை கைது செய்யாத தமிழக, புதுச்சேரி மாநில அரசுகளைக் கண்டித்து புதுச்சேரி மாநில பாஜக சார்பில் ராஜீவ் காந்தி சதுக்கத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.
   தமிழகம், புதுவையில் ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
   இதுவரை 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
   மேலும், பாஜக நிர்வாகிகள் வீடுகள், சொத்துகள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
   இதன்மீது தமிழக, புதுச்சேரி அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து, பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி, சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஆர்வி. சாமிநாதன் தலைமை வகித்தார்.
   பொதுச் செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர்கள் கேசவலு, தாமோதரன், மாநில நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வம், துரைகணேசன், ஜெயந்தி லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
   மறியலால் ராஜீவ் காந்தி சதுக்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai