சுடச்சுட

  

  புதுவையில் பால் வேன் மீது எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி மோதியது.
   புதுவை குரும்பாபேட் பாண்லே நிறுவனத்தில் இருந்து புதுவை நகருக்கு பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு வேன் வியாழக்கிழமை அதிகாலை வந்தது. அந்த வேன் ராஜீவ்காந்தி சிலை சிக்னல் அருகே வரும்போது, கிழக்கு கடற்கரை சாலை வழியாக எரிவாயு உருளைகளை ஏற்றி வந்த லாரி மோதியது.
   மோதியதில் பால் வேன் கவிழ்ந்தது. இதில் பால் பாக்கெட்டுகள் சாலையில் சிதறின. இதனைக் கண்ட அந்த வழியாக வந்த பொதுமக்கள் பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றனர். மேலும், சில பாக்கெட்டுகள் உடைந்ததால், சாலைகளில் பால் கொட்டியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பாண்லே அதிகாரிகள், மீதமிருந்த பால் பாக்கெட்டுகளை எடுத்து மற்றொரு வேனில் ஏற்றி அனுப்பினர். இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸார், போக்குவரத்தை சரி செய்தனர்.
   இந்த விபத்தில் எரிவாயு உருளைகளில் இருந்து எரிவாயு கசிவு ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai