சுடச்சுட

  

  புதுவையில் பல்வேறு இடங்களில் புகையிலைப் பொருள் விற்றதாக 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
   புதுவையின் பல்வேறு இடங்களில் போதை பாக்குகள் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகவும், அவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் போலீஸார் புதன்கிழமை சோதனை செய்தனர்.
   கோரிமேடு, வழுதாவூர், சாரம், அரியாங்குப்பம், காலாப்பட்டு உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
   இதில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை கடைகளில் வைத்திருந்ததாக பிரதீபன், நிஜாம், கணேஷ், சிவகுமார், ஜெயசங்கர், பத்மா, குப்பம்மாள் உள்ளிட்ட 16 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கடைகளில் வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
   செய்யப்பட்டன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai