Enable Javscript for better performance
போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு

    By புதுச்சேரி,  |   Published on : 30th September 2016 09:43 AM  |   அ+அ அ-   |    |  

    புதுவையில் உள்ள போக்குவரத்துத் துறை அலுவகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி விளக்குகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
     புதுச்சேரி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை மூலம் ரூ.5.57 லட்சம் செலவில் எல்.இ.டி. சூரிய ஒளி விளக்குகள் போக்குவரத்துத் துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
     இந்த விளக்குகள் மாலை 6 மணிக்கு சூரிய ஒளி குறைந்தவுடன் தானாக எரியத் தொடங்கும். பின்னர், காலை 5.30 மணிக்கு தானாக அணைந்துவிடும்.
     இந்த புதிய விளக்குகளின் செயல்பாடுகள் குறித்து புதன்கிழமை காலை அமைச்சர் ஷாஜகான் ஆய்வு செய்தார். அப்போது, போக்குவரத்துத் துறை செயலாளர் அருண் தேசாய், போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai