புதுச்சேரியில் ஏழைகளுக்கு மட்டுமே சிவப்பு நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படும். வசதி படைத்தோர் நீக்கப்படுவர் என நலத் துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதம்:
வையாபுரி மணிகண்டன்: புதுச்சேரியில் சிவப்பு நிற குடும்ப அட்டைகள் தகுதியற்றோருக்கு தரப்பட்டுள்ளன. சில தொகுதிகளுக்கு மட்டும் தராதீர்கள். யாருக்கு தரப் போகிறீர்கள்? கூலித்தொழிலாளர்களுக்கு தரப்படும் ரேஷன் அட்டைகளிலேயே தவறு உள்ளது.
அமைச்சர் கந்தசாமி: சிவப்பு நிற குடும்ப அட்டைகள் தொடர்பாக ஆய்வு செய்து தகுதி இல்லாதவை நீக்கப்படும். இப்பணி முடிந்த பிறகு மஞ்சள் நிற குடும்ப அட்டையை மாற்றக்கோரி பெறப்பட்ட வேண்டுகோள் கடிதம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 20 ஆயிரம் சிவப்பு நிற அட்டைகள், மஞ்சள் நிற அட்டைகளாக மாற்றப்படவுள்ளன. அந்த இடத்தில் மேலும் 20 ஆயிரம் ஏழைகளுக்கு பயன் கிடைக்கும். குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய உள்ளோம். வரும் 20ஆம் தேதி தொடங்கி இரு வாரத்தில் ஆய்வு செய்து செய்ய உள்ளேன். பரிந்துரைகளை ஏற்கப்போவதில்லை.
மாநிலம் முழுக்க வசதி படைத்தோர் நீக்கப்பட்டு, ஏழைகளுக்கு மட்டுமே சிவப்பு நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.