கிராம நிர்வாக அதிகாரி காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. இரா.சிவா வலியுறுத்தினார்.
புதுச்சேரி சட்டப் பேரவையில் புதன்கிழமை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அவர் பேசியதாவது:
தற்போது உள்ள புதுச்சேரி சட்டப்பேரவையை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய சட்டப்பேரவையை கட்ட வேண்டும். முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஓய்வூதியத்தை 10 ஆயிரத்தில் இருந்து உயர்த்தி வழங்க வேண்டும். அவர்களுக்கு மனைப்பட்டா ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.
சட்டப்பேரவையில் உள்ள தினக் கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசுச் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். செயலகத்தில் ஒரு பிசிஎஸ் அதிகாரிகள் கூட பணிமாற்றம் செய்யப்படாமல் உள்ளனர். இதன் மீது முதல்வர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி வழக்குரைஞர்களுக்கு தமிழகத்தில் உள்ளது போல் சமூக காப்பீடுத் திட்டம் இல்லை. அதனை ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும். பெட்ரோல் நிலையங்களில் உள்ள வரிபாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையை செம்மைப்படுத்த வேண்டும். "100' ரோந்து வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும்.
தண்டனை முடிந்த குற்றவாளிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். புதுச்சேரியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி இடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.