புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் வாகனங்கள் செல்லஜூன் 15 வரை தடை

புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் (பெரியார் சிலையில் இருந்து சுப்பையா சிலை வரை) பொதுப்பணித் துறை மூலம் குடிநீர் குழாய்கள் பதிக்கும்
Updated on
1 min read

புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் (பெரியார் சிலையில் இருந்து சுப்பையா சிலை வரை) பொதுப்பணித் துறை மூலம் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறவிருப்பதால் அச்சாலையில் வருகிற 15-ஆம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழித் தடத்தில் இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், அனைத்து கனரக வாகனங்கள் மாற்று வழியாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் மறைமலையடிகள் சாலை-நெல்லித்தோப்பு சிக்னல்-இந்திரா காந்தி சிக்னல்-ராஜீவ் காந்தி சிக்னல்-காமராஜ் சாலை வழியாக செல்ல வேண்டும்.
அதே போல முத்தியால்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் அஜந்தா சிக்னல்-எஸ்வி.பட்டேல் சாலை-நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை-சுப்பையா சாலை-ஒதியஞ்சாலை-மறைமலையடிகள் சாலை வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தை அடையலாம்.
அல்லது ஏழை மாரியம்மன் கோயில் சந்திப்பு-சிவாஜி சிலை-கொக்கு பார்க்-ராஜிவ் காந்தி சிக்னல்-இந்திரா காந்தி சிக்னல்-நெல்லித்தோப்பு-மறைமலையடிகள் சாலை வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தை அடையலாம்.
இந்த தாற்காலிக போக்குவரத்து ஏற்பாட்டுக்கு வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வடக்கு-கிழக்கு போக்குவரத்து காவல் பிரிவு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com