அரசுத் துறைகளில் 7,535 காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தடை: முதல்வர் தகவல்

புதுவையில் அரசுத் துறைகளில் மொத்தம் 7,535 காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப மத்திய அரசு தடையாணை உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Published on
Updated on
1 min read

புதுவையில் அரசுத் துறைகளில் மொத்தம் 7,535 காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப மத்திய அரசு தடையாணை உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
 பேரவையில் இதுதொடர்பாக நடந்த விவாதம்
 அன்பழகன் (அதிமுக): புதுச்சேரி அரசில் எத்தனை துறைகள் உள்ளன. மொத்தம் எத்தனை அரசு ஊழியர்கள் உள்ளனர். காலிப் பணியிடங்கள் எத்தனை உள்ளன. ஆண்டுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது.
 முதல்வர்: மொத்தம் 50 அரசுத் துறைகள் உள்ளன. இதில் 27,489 அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அனுமதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மொத்தம் 35 ஆயிரத்து 24 பேர். அதில் காலியாக 7535 இடங்கள் உள்ளன. அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர படிகளுக்காக ரூ. 1, 558 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் வருவாயில் 25.1 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது.
 அன்பழகன்: நான்கில் ஒரு பங்கு காலியாக உள்ளது. கல்வித் துறையில் 1685 இடங்கள், வேளாண் துறையில் 349 இடங்கள் என முக்கியத்துறைகளில் மட்டும் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அரசு எப்படி சிறப்பாக நடத்த முடியும்.
 முதல்வர்: காலியிடங்களை நிரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. அனுமதியில்லாமல் நிரப்பக்கூடாது. தேவையான பதவிகளை நிரப்ப அனுமதி கேட்க வேண்டும்.
 அன்பழகன்: மருத்துவத் துறையில் மட்டும் 558 இடங்கள் காலியாக உள்ளன. கல்வித் துறையிலும் ஏராளமான இடங்கள் காலியாக இருந்தால் எப்படி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க முடியும்.
 முதல்வர்: கல்வித்துறையில் நூற்றுக்கணக்கான இடங்கள் இருந்தாலும், தகுதி வாய்ந்த திறமையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் தேவையான அதிகாரிகளை நியமிக்க கேட்டுள்ளோம்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com