"எம்.எல்.ஏ.க்களுக்கு மரியாதை தரப்படுவதில்லை'

எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேல் புகார் கூறினார்.
Published on
Updated on
1 min read

எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேல் புகார் கூறினார்.
 புதுச்சேரி சட்டப் பேரவையில் புதன்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தின் போது நடைபெற்ற விவாதம்:
 தனவேலு (காங்கிரஸ்): பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயல்பாடு திருப்தியில்லை. புதுச்சேரியில் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2015-இல் நலவாரியத்தை தொடங்கினார்கள். அதற்கு முறையான கட்டடம் இல்லை. செயலர் இல்லை. தனி இயக்குநர் இல்லை. ஒதுக்கக்கூடிய நிதி பத்து விழுக்காடு கூட இல்லை. புதுவையில் பிற்படுத்தப்பட்டோர் 80 சதவீதம் பேர் உளளனர். வீட்டுக்கு இரு பட்டதாரிகள் உள்ளனர்.
 ஐஏஎஸ் தேர்வு எழுத 50 பேருக்குத்தான் பயிற்சி தரப்படுகிறது.
 அமைச்சர் கந்தசாமி: இது முக்கியப் பிரச்னை. திட்டங்கள் இருக்கிறது. நிதி ஒதுக்க வேண்டும். அனைவரும் ஆலோசனை கூறலாம். அனைத்து எம்எல்ஏக்களையும் அழைத்துப் பேசி முடிவு எடுப்போம்.
 முதல்வர்: இதுதொடர்பாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மைத் துறைக்கு தனிக் கவனம் செலுத்தி நிதி ஒதுக்கி அனைத்துத் துறைகளுக்கும் அனைத்து சமுதாய மக்களுக்கும் நிதி சென்றடையும்.
 தனவேலு: உரிய மரியாதை தந்து கேள்வி கேட்டால் குறைகளை சொல்லத் தயாராக இருக்கிறோம். ஆனால், எம்எல்ஏக்களுக்கு மரியாதை மறுக்கப்படுகிறது. அமைச்சர்கள் எங்களின் குறைகளை கேட்கவே தயாராக இல்லை.
 அமைச்சர் கந்தசாமி: நிதி இல்லாதது முக்கிய பிரச்னை. எம்எல்ஏக்களுக்கு மரியாதை இல்லை என்று பேசக்கூடாது. நீங்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏ., எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை நாங்கள் மதிக்கிறோம். ஆளுங்கட்சி தரப்புக்கு அதிகமாக மரியாதை தருகிறோம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com