புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணையக்குழு சார்பில், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் வழக்குகளில் சமரசம் செய்து வைப்பது குறித்த பயிற்சி முகாம் 17-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் நீதிபதி வ.சோபனாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆணைய செயல் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான
ஹுலுவாடி ஜி ரமேஷ் உத்தரவின் பேரில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில், புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் 35 பேருக்கு, தமிழ்நாடு சமாதானம் மற்றும் சமரச மையத்தின் மூலம் தகுதி வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி தரப்படுகிறது.
இதன் தொடக்க விழா சட்டப்பணிகள் ஆணைய கலந்தாய்வு அரங்கில் 17-ஆம் தேதி நடக்கிறது. இதை உயர்நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ஜி ரமேஷ் தொடக்கிவைத்துப் பேசுகிறார். உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் சிறப்புரையாற்றுகிறார்.
தலைமை நீதிபதி எஸ்.ராமதிலகம், சட்டத்துறைச் செயலாளர் கோ.செந்தில்குமார், ஆணைய உறுப்பினர் செயலர் வ.சோபனாதேவி, அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் திருக்கண்ண செல்வன், காரைக்கால் ஆர்.ராஜ்குமார் பங்கேற்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் உமா ராமநாதன் சமரச முறையில் வழக்குகளுக்கு தீர்வு காணுவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.