செய்தி-விளம்பரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் தகுதியின்படி நிரப்பப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் புதன்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
லட்சுமி நாராயணன்: அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் மீண்டும் சென்று நிர்வாகத்திடம் சான்றிதழ்கள் பெற்று வருமாறு கூறி செய்தித் துறையில் கூறுகின்றனர்.
ஒருமுறை நிர்வாகத்திடம் சான்றிதழ் பெற்று அளித்தால் மீண்டும் கேட்கக்கூடாது.
முதல்வர்: அங்கீகார அடையாள அட்டை தந்து விட்டு, மீண்டும் மீண்டும் சான்று கேட்கக் கூடாது என உத்தரவிடுவோம்.
செய்தியாளர்களுக்கு காப்பீடு திட்டம், ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. செய்தி விளம்பரத் துறையில் 93 பணியிடங்கள் உள்ளன. இதில் 32 காலியிடங்கள் தகுதியின்படி நிரப்பப்படும்.
திட்டங்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும்: இரா.சிவா: காங்கிரஸ் அரசு வந்து பொதுப்பணித் துறையில் எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை.
கடந்த ஆட்சியில் நடந்த பணிகளுக்கு நிலுவைத் தொகை தரவில்லை. தற்போது இந்த அரசு ஒப்பந்தப்புள்ளி வைத்தாலும் எவரும் பணி செய்ய முன்வரமாட்டார்கள். ஹட்கோ நிதியுதவி திட்டத்திலும் பணம் பாக்கி வைத்துள்ளனர்.
அமைச்சர் நமச்சிவாயம்: கடந்த ஆட்சியில் செய்த வேலைகளுக்கு பணம் தரவில்லை. ஒவ்வொரு உள்ளாட்சித் துறையிலும் ரூ.23 கோடி பாக்கி இருந்தது. ரூ.15 கோடி தரப்பட்டுள்ளது பொதுப்பணித் துறையில் ரூ.123 கோடி பாக்கி உள்ளது. சிறிது சிறிதாக பணப் பாக்கியை தந்து வருகிறோம். சில இடர்பாடுகள் உள்ளன. கடந்த மாதம் கூட ரூ.2 கோடி நிலுவை தரப்பட்டது. பணிகளை தடையின்றி நடக்க உத்தரவிட்டுள்ளோம்.
அசனா: காரைக்கால் கூட்டுறவு சங்க நியாய விலைக் கடை ஊழியர்கள் பணி நிரந்தம் செய்யப்படவில்லை. ஊதியமும் தரப்படவில்லை.
அமைச்சர் கந்தசாமி: முதல்வர், தலைமைச் செயலரிடம் பேசி உள்ளோம். 13 மாதங்கள் ஊதிய நிலுவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.