நீக்கப்பட்ட பிடிடிசி ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்: அன்பழகன் எம்.எல்.ஏ.

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணி நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என
Published on
Updated on
1 min read

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணி நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
 பேரவையில் உடனடிக் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
 அன்பழகன்: சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் எவ்வளவு பேரை பணி நீக்கம் செய்தீர்கள். இதற்கு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதா? அனுமதி பெறப்பட்டதா? 8 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை எப்படி நீக்கலாம். அந்த வாரியத் தலைவருக்கு ஊழியர்களை நீக்க அதிகாரம் உள்ளதா?
 முதல்வர்: பிடிடிசியில் 188 பேர் தினக்கூலி ஊழியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். நேரடியாக நியமிக்கப்படவில்லை. இதனால் தலைவர் முடிவெடுத்து அவர்களை நீக்கி உள்ளனர். இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது. மேல் தகவல் செல்ல முடியாது. தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய உரிமை கோர முடியாது.
 அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன்: அரசு மீது ஆதாரமின்றி குற்றச்சாட்டை கூறக்கூடாது. காங்கிரஸ் அரசு எந்த ஊழியர்களையும் நியமிக்கவில்லை. தினக்கூலி ஊழியர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.
 அன்பழகன்: 2016-17-ல் சீகல்ஸ் ஹோட்டலில் ரூ.57 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் அமைச்சர்களின் உதவியாளர்கள் சாப்பிட்டு போனதற்கு பணத்தை செலுத்தவில்லை. ஏன் அதை வசூலிக்கவில்லை.
 அமைச்சர் கமலக்கண்ணன்: ரூ.57 லட்சம் கடந்த ஆட்சியில் செலுத்தவில்லை என்பது உண்மையான தகவலா? பொய்யான புகார்களை பேரவையில் தெரிவிக்கின்றனர்.
 முதல்வர்: சீகல்ஸ் ஓட்டலில் எவரும் நிலுவை வைத்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 அன்பழகன்: கடந்த 2017-ஆம் ஆண்டு வரை ரூ.57 லட்சம் நிலுவை உள்ளது. அரசு ஊழியர்கள் என்ற போர்வையில் அமைச்சர்களின் உதவியாளர்கள் சென்று வருகின்றனர்.
 அமைச்சர் கமலக்கண்ணன்: அரசு மீது பொய்யான புகாரைக் கூறினால் வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம்.
 முதல்வர்: முந்தைய ஆட்சியில் பிடிடிசியில் தவறு நிகழ்ந்துள்ளது.
 ஜெயபால்: என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது அன்பழகன் தான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். அப்போதே இதைக் கேட்டிருக்கலாம்.
 அன்பழகன்: கடந்த ஆட்சியில் தான் அனைத்து வாரியங்களையும் சீரழித்தனர். புதுச்சேரி நிர்வாகத்தை சீரழித்தது என்.ஆர். காங்கிரஸ் தான். தனியார் வசம் ஓப்படைத்தாலே ரூ.2 கோடி லாபம் கிடைக்கும்.
 இராசிவா: அருமையான இடமாக சீகல்ஸ் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் சுற்றுலாத் துறை ஹோட்டல்களை சிறப்பாக இயக்குகின்றனர். புதுவையில் மட்டும் ஏன் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதில் 200 பேர் வேலை செய்கின்றனர். நஷ்டத்தை காண்பித்து மூட வேண்டாம்.
 முதல்வர்: லேகபே ஹோட்டலுக்குச் சென்று பார்வையிட்டேன். உள்ளே சென்று காபி அருந்தினால் ரூ.62 வசூலிக்கின்றனர். அதற்கு எதிரே உள்ள ஹோட்டலில் ரூ.12 தான் காபிக்கு வசூலிக்கின்றனர். லாபத்தில் இயங்க வேண்டிய ஹோட்டலை தவறான நிர்வாகத்தால் நஷ்டத்துக்கு தள்ளி விட்டனர்.
 பாஸ்கர்: கடந்த ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக தான் நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஆதாரத்துடன் தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
 அமைச்சர் நமச்சிவாயம்: ஆதாரம் இருந்தால் தாருங்கள் எனத்தான் அமைச்சர் கேட்டார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com