மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் உத்தரவை நிறைவேற்றியுள்ளோம்

மருத்து பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்பாக, மத்திய அரசின் உத்தரவை விதிகளை மீறாமல் நிறைவேற்றியுள்ளோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Published on
Updated on
2 min read

மருத்து பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்பாக, மத்திய அரசின் உத்தரவை விதிகளை மீறாமல் நிறைவேற்றியுள்ளோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
 மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
 மருத்துவ பட்டமேற்படிப்பு தொடர்பான தரவரிசை பட்டியல் சென்டாக் இணையத்தில் வெளியிடப்பட்டது.
 மார்ச் இறுதியில் கட்டணம் நிர்ணயிக்க கட்டணக் குழுத் தலைவரிடம் வாய் மொழியாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தை கூட்ட முடியவில்லை. அவருக்கு உடல் நிலை சரியில்லை.
 முதல் முறையாக 50 சதவீத இடஒதுக்கீடு புதுச்சேரி அரசால் பெறப்பட்டது.
 வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கிளினிக்கல், கினினிக்கல் அல்லாத இடஒதுக்கீடு புதுச்சேரி அரசு பெற்றது. தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகத்திலிருந்து அரசு ஒதுக்கீட்டாக ஓரிடம் கூட பெறவில்லை. நீட் தேர்வில் தகுதி பெற்ற 613 மாணவர்களில் புதுச்சேரி மாநிலத்தின் ஒதுக்கீட்டான 162 இடங்களுக்காக 267 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர். அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்காக 1827 மாணவர்கள் விண்ணப்பித்தனர். சுமார் 30 மாணவர்கள் இந்திய அளவில் இதர மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். கிளினிக்கல் படிப்பையே அனைவரும் விரும்புகின்றனர். நான்-கினினிக்கல் படிப்பில் காலியிடங்கள் உள்ளன.
 அனைத்து 267 விண்ணப்பதாரர்களும் இரண்டு கலந்தாய்விலும் கலந்து கொண்டனர். மேலும் 267 மாணவர் வரை முதுநிலை படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றனர்.
 முதல் இரு கட்ட கலந்தாய்வில் 91 இடங்கள் புதுச்சேரி அரசின் ஒதுக்கீட்டாகவும், 118 இடங்கள் நிர்வாக இடங்களுக்கான ஒதுக்கீட்டாக ஆணை வழங்கப்பட்டது. பட்டயப் படிப்பில் உள்ள இடங்களில் 13 புதுச்சேரி அரசு இடங்களாக நிரப்பப்பட்டது. இரண்டு கலந்தாய்வு முடிவில் புதுச்சேரி அரசு இடங்களில் 71 இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக இருந்தன. இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்தது.
 இவையனைத்தும் கடந்த மே 29, 30-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெற்ற மாப்-அப் கலந்தாய்வில் 143 தேர்வானார்கள். அதில் பத்து பேர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள்.
 மாணவர் சேர்க்கை மே 31ம் தேதிக்குள் முடித்து விட என்று எம்சிஐ அறிவித்திருந்தது.
 பொதுப்பிரிவுக்கு கட் ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உடனடிக் கலந்தாய்வும் நடைபெற்றது. இதுவும் மாப் அப் கலந்தாய்வும் சேர்த்து கொள்ளப்பட்டது. இதிலும் 10 இடங்களை புதுச்சேரி மாணவர்கள் தேர்ந்தெடுத்தனர். அதனால், புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டாக மொத்தம் 101 இடங்கள் கொடுக்கப்பட்டது. மேலும், பட்டயப் படிப்பு சேர்க்கை ஆணை 13 பேருக்கு தரப்பட்டது. மொத்தம் 114 பேருக்கு சேர்க்கை ஆணை தரப்பட்டது.
 அதன்படி அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் 114 இடங்கள் தரப்பட்டது. அதேபோல் நிர்வாக ஒதுக்கீட்டு மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 148 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
 கட்டணக் குழு அறிவுறுத்தல்படி தமிழ்நாடு கட்டணமே கடைப்பிடிக்கப்பட்டது.
 தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டண விகிதம் குறைவாக விதிக்கப்பட்டதாகக் கூறி மாணவர்களை சேர்க்கையை சில கல்லூரிகள் சேர்க்க மறுத்தன. மணக்குள விநாயகர், வெங்கடஸ்வரா கல்லூரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றன. இதை நீக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 மாணவர் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த இரு கல்லூரிகளுக்கு அவர்களுக்கு தரப்பட்ட அத்தியாவசிய சான்றை ஏன் திரும்ப பெறக்கூடாது? என்று கடந்த 31ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
 புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக அரசு ஒதுக்கீட்டில் 50 சத ஒதுக்கீடு இந்த அரசின் மூலம் பெறப்பட்டு இடஒதுக்கீடு கொள்கைப்படி நிரப்பப்பட்டது. விதிமுறைகளை மீறாமல் மத்திய அரசு உத்தரவை நிறைவேற்றியுள்ளோம் என்றார் நாராயணசாமி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com