இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு புதுச்சேரி சட்டப்பேரவை தயாராகி வருகிறது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில், இதற்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
நாடு முழுவதும் இருந்து 545 எம்.பிக்கள், 4,012 எம்.எல்.ஏக்கள் வாக்களித்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்கின்றனர். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மொத்தம் 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலாளர் வின்சென்ட் ராயர் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்வதற்கான தேர்தல் அலுவலர் அலுவலகம் அமைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தல் நடைமுறைகள் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பாக அறிவிப்பு புதன்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் ஓட்டப்பட்டது.
காங்கிரஸ் 15, என்.ஆர். காங்கிரஸ் 8, அதிமுக 4, திமுக 2, சுயேச்சை 1 உள்பட 30 எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.