புதுச்சேரியில் புதன்கிழமை 109 டிகிரி வெப்பம் பதிவானது.
புதுவையில் காலையிலிருந்தே வெயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், நண்பகல் 12.30 மணி அளவில் 105.05 பாரன்ஹீட் (40.6 செல்ஸியஸ்) பதிவாகி இருந்தது. மதியம் 2.30 மணி அளவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. அதன்படி, 109 பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவானது.
இது கடந்த 10 ஆண்டுகளில், அதாவது 2012-க்கு பிறகு தற்போதுதான் இந்த அளவுக்கு அதிகமான வெப்பம் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.