பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வெளியாகின்றன.
கடந்த மார்ச் 8-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி 28-ம் தேதி முடிவுற்றது. புதுவை மற்றும் காரைக்காலில் மொத்தம் 17,572 பேர் எழுதினர்.
புதுவை பிராந்தியத்தில் 240 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 7,487 மாணவர்கள் மற்றும் 7,243 மாணவிகள் எழுதினர். இதில் 84 அரசுப் பள்ளிகளிலிருந்து 2,502 மாணவர்கள், 2,927 மாணவிகள் என மொத்தம் 5,429 பேரும், 155 தனியார் பள்ளிகளிலிருந்து 4,979 மாணவர்கள், 4,311 மாணவிகள் என மொத்தம் 9,290 பேரும் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர்.
தனித் தேர்வர்களாக 1,472 பேர் எழுதினர். மொத்தம் 14,730 பேர் தேர்வெழுதினர்.
காரைக்கால் பிராந்தியத்தில் 61 பள்ளிகளைச் சேர்ந்த 1,459 மாணவர்கள் மற்றும் 1,383 மாணவிகள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதினர். இதுதவிர தனித்தேர்வர்களும் பங்கேற்றனர்.
கடந்த மாதம் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்தத் தேர்விலும் ரேங்க் முறை பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.