புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறை சார்பில் பேன்சி வாகன பதிவு எண்கள் ஏலம் (PY-01-CQ) www.auctionindia.com என்ற இணையதளம் மூலம் 18-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் நடைபெறும்.
இந்த மின்னணு ஏல முறையில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் அதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் ஏல நிபந்தனைகளை 18-ம் தேதி முதல் http:transport.puducherry.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும், பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத் தொகையின் விவரம், இஎம்டி யின் விவரம், மற்றும் இதுதொடர்பான இதர விவரங்களை ஏல நிபந்தனைகளின் மூலமாகவும் மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலகத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தகவலை போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.