உழவர்கரை வட்டத்தில் கூடுதலாக வருவாய்த் துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதிக் குழு கோரியுள்ளது.
இது தொடர்பாக வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜஹானிடம், அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.விஸ்வநாதன், நிர்வாகக் குழு உறுப்பினர் கே.சேதுசெல்வம், தொகுதிச் செயலர் பி.முருகன், நிர்வாகிகள் கே.கருணாகரன், ஆர்.செல்வம் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
உழவர்கரை வட்டம் 2003-ஆம் ஆண்டு மறு சீரமைக்கப்படுவதற்கு முன்பே 8 வருவாய் கிராமங்களாக பிரிக்கப்பட்டது. மறு சீரமைக்கப்பட்ட பிறகும் அதே 8 வருவாய் கிராமங்கள் உள்ளன.
இவற்றுக்கு மொத்தம் 6 கிராம நிர்வாக அலுவலர்களே பணியில் உள்ளனர். இவர்களுடன் ஒரு வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பணியில் உள்ளனர்.
தற்போது உழவர்கரை நகராட்சியில் புதிதாக பல நகர்கள் பெருகி உள்ளன. மேலும் ஆண்டுதோறும் 4500-க்கும் மேற்பட்டோருக்கு சென்டாக் சான்றிதழ்கள் தரப்படுகின்றன.
இதை கருத்தில் கொண்டு கூடுதலாக 6 வருவாய் கிராம அதிகாரிகள், ஒரு வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியரை நியமிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.