7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை உள்ளாட்சித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், இறந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு பணியாணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உழவர்கரை நகராட்சி ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் துறை இயக்குநர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. யூனியன் தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலச் செயல் தலைவர் நாரா. கலைநாதன், மாநிலத் தலைவர் அபிஷேகம், பொதுச் செயலாளர் தினேஷ்பொன்னையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் ஏழுமலை, கண்ணப்பன், ஆறுமுகம், மன்னாதன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.