சோரியாங்குப்பத்தில் பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:
சோரியாங்குப்பம் பகுதி காவல் துறையிடம் அனுமதி பெற்று மறியல் போராட்டத்தை பொதுமக்கள் நடத்தியுள்ளனர். கலால் துறை அதிகாரிகள் இந்தப் பிரச்னையில் உரிய தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
காவல் துறையினர் திட்டமிட்டு போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு தடியடி நடத்தியுள்ளனர்.
இதில் பல பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், மதுக்கடை பிரச்னைகள் குறித்த பொதுமக்கள் கருத்தறிய கொம்யூன் வாரியாக பொது விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ராஜாங்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.