தனியார் நிறுவனத்துடன் ஜிப்மர் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொள்கை உருவாக்கம், ஆராய்ச்சி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஐஎம்எப்ஆர் லீட் என்ற தனியார் நிறுவனத்துடன், ஜிப்மர் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Published on
Updated on
1 min read

கொள்கை உருவாக்கம், ஆராய்ச்சி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஐஎம்எப்ஆர் லீட் என்ற தனியார் நிறுவனத்துடன், ஜிப்மர் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
 கடந்த 1970 முதல் உயர்தர அளவீடு மற்றும் ஆதார அடிப்படை ஆராய்ச்சிகளை ஐஎம்எப்ஆர் லீட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தங்களது ஆராய்ச்சி மூலம் உள்ளடங்கிய மற்றும் நிலையான வளர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
 மேலும், தேசிய அளவில் கொள்கை உருவாக்கம் மற்றும் தலைமைப் பொறுப்பில் உள்ள நிபுணர்களிடம் நேரடி தொடர்பில் உள்ள பலமான பங்குதாரர்கள் மற்றும் நிறுவனங்களுடன் கூட்டாக செயல்பட்டு வருகிறது. சென்னையை தலைமை இடமாகக் கொண்ட இந்த நிறுவனம் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் சுமார் 100 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது.
 ஆராய்ச்சி மற்றும் கல்வி அம்சங்களில் கூட்டாக இணைந்து செயல்படுதல், பரஸ்பரம் பயன் அடைதல், ஜிப்மர் மற்றும் ஐஎம்எப்ஆர் லீட் நிறுவனம் இணைந்து பணிபுரியத் தேவையான அடித்தளம் அமைத்தல், போன்றவற்றின் அடிப்படையில் ஜிப்மர் இயக்குநர் பரிஜா, லீட் நிர்வாக இயக்குநர் சரோன் பியுடியு ஆகியோர் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 லீட் பேராசிரியர் டாக்டர் ராகேஷ் நிகாம், ஆலோசகர் டாக்டர் சப்னாநாயர் மற்றும் ஜிப்மர் மூத்த பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com