புதுவை மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு தலைமை வகித்தார்.
அரசுக் கொறடாவும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.கே.அனந்தராமன் பேசுகையில், தொகுதி முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். தொகுதியின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்றார். பின்னர், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களையும் அவர் வழங்கினார். முக்கிய நிர்வாகிகள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.