மேல்நிலை சிறப்பு தேர்வு எழுத தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜு தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செப்டம்பர்/ அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்வுக்கு, தேர்வெழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) மூலம் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசு தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கீழ்க்காணும் முகவரியில் இயங்கும் சிறப்பு சேவை மையத்தில் வரும் 8-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பதாரர் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தனியார் கணினி மையம் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான சேவை மைய முகவரி: மேல்நிலை கல்வி தேர்வு பிரிவு, நான்காம் தளம், பள்ளி கல்வி இயக்ககம், அண்ணா நகர், புதுச்சேரி - 5.
விண்ணப்பிக்க விரும்புவோர்:
எச் வகையினர் ஒரு பாடத்திற்கு ரூ.50 மற்றும் இதர கட்டணம் ரூ.35 என ரூ.85 செலுத்த வேண்டும். எச்.பி. வகையினர் அனைத்து பாடங்களையும் சேர்த்து ரூ.150 மற்றும் இதர கட்டணம் ரூ.37 என ரூ.187 செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1000ம், பதிவுக் கட்டணமாக ரூ.50ம் பணமாக செலுத்த வேண்டும். தட்கலில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் சென்னையில் மட்டும் தேர்வெழுத இயலும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.