துறைமுகத்தை ஆழப்படுத்த வலியுறுத்தி புதுச்சேரியில் மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்

புதுவைதுறைமுக முகத்துவாரத்தை விரைந்து ஆழப்படுத்த வலியுறுத்தி விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் புதன்கிழமை கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.
Updated on
1 min read

புதுவைதுறைமுக முகத்துவாரத்தை விரைந்து ஆழப்படுத்த வலியுறுத்தி விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் புதன்கிழமை கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.
 புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வம்பாகீரப்பாளையம் முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
 கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகத்துவாரம் பகுதியில் மணல் சேர்ந்து மேடானது.
 இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலையில், முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
 மத்திய அரசின் டிசிஐ நிறுவனம் சார்பில் முகத்துவாரம் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சரிவர தூர்வாராததால் முகத்துவாரப் பகுதியில் மீண்டும் மண் சரிந்து வருகிறது.
 இந்த நிலையில், காரைக்கால் தனியார் துறைமுகத்துக்குச் சொந்தமான மணல் வாரிக்கப்பல் வரவழைக்கப்பட்டு அந்தக் கப்பல் மூலம் மணலை துறைமுகப் பகுதியில் தூர்வாரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
 இதற்கிடையே, முகத்துவாரம் வழியாக மீன் பிடிப்பதற்காக சென்ற விசைப்படகுகள் மணலில் சிக்கி சேதமடைந்தன.
 இதனால், மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 எனவே, துறைமுக முகத்துவாரத்தை விரைவாக ஆழப்படுத்த ஆளுநரும், முதல்வரும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவம், நீட் தகுதித் தேர்வைக் கண்டித்தும் முகத்துவாரம் அருகே கடலில் இறங்கி விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com