Enable Javscript for better performance
புதுவையில் 112 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் 112 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

    By புதுச்சேரி,  |   Published on : 07th March 2017 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் இதுவரை பன்றிக் காய்ச்சலால் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
     கடந்த 2 மாதங்களாக புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ம் தேதி வரை 107 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
     இதில் 6 பேர் உயிரிழந்தனர். 90-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர்.
     மற்றவர்கள் கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     சுகாதாரத் துறை சார்பில் இந்நோய் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் காரணமாக வரும் நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்படுகிறது.
     இந்த ரத்த மாதிரிகள் ஜிப்மரில் ஆய்வு செய்யப்பட்டு தினம்தோறும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
     இதில் கூடப்பாக்கம், காலாப்பட்டு, கரிக்கலாம்பாக்கம், வாணரப்பேட்டை, ஜிப்மர் வளாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதியானது.
     இவர்களையும் சேர்த்தால் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை புதுவையில் 98 பேர், காரைக்கால் 14 பேர் மொத்தம் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai