சுடச்சுட

  

  அரசுத் துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே டெங்கு காய்ச்சல் பரவக் காரணம்: கிரண் பேடி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 01st October 2017 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறையிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே புதுச்சேரில் டெங்கு காய்ச்சல் பரவக் காரணம் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டினார்.
  வார இறுதி நாள்களில் புதுவையின் பல்வேறு பகுதிகளில் ஆளுநர் கிரண் பேடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 109 வாரங்களைத் தாண்டி அவரது கள ஆய்வுப் பயணம் தொடர்கிறது.
  இந்த நிலையில், சனிக்கிழமை அவர் குருமாம்பேட்டில் உள்ள குப்பைக் கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிப்பு, மின்சார உற்பத்தி பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
  அவருடன் உள்ளாட்சித் துறை இயக்குநர் முகமது மன்சூர், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  குரும்பாபேட் குப்பைக் கொட்டும் கிடங்கைப் பார்வையிட்டேன். அதை மேம்படுத்தும் பணிகள் ஒரளவு நடைபெறுள்ளன. நகராட்சி, சுகாதாரத் துறை இணைந்து செயல்பட வேண்டும்.
  பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து மக்கும், மக்காத குப்பைகளைத் தனித் தனியாக துப்புரவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். அப்போதுதான் தூய்மை இந்தியா என்ற திட்டம் வெற்றி பெறும்.
  டெங்கு காய்ச்சல் பரவி வருவதற்கு சுகாதாரம், உள்ளாட்சித் துறைகள் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே காரணமாகும். வெறும் கொசு மருந்து அடித்தால் மட்டும் போதாது.
  கழிவு நீர் வாய்க்கால்களைத் தூர் வாருவதும், கொசு மருந்து அடித்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.
  எனது செயலர் தேவநீதிதாஸின் இரு மகன்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
  டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறைகள் எடுக்க வேண்டும். அனைத்து துறைகளும் தனித் தனியாகச் செயல்படுகின்றன என்றார்
  கிரண் பேடி.
  மேலும், அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: பொது கவனிப்பு, பாதுகாப்பு பற்றிய விவகாரங்களை ஒழுங்காக மீளாய்வு செய்வது மூத்த மேற்பார்வை அலுவலர்களின் முதன்மைக் கடமையாகும்.
  அனைத்துத் துறைச் செயலர்களும், துறைத் தலைவர்களும் தங்கள் பொறுப்புகளைச் செய்ய வேண்டும். வழிமுறைகளைச் சரியாக ஆய்வு செய்து பின்பற்ற வேண்டும்.
  தங்களுக்கு கீழுள்ள அதிகாரிகள் முறையாகச் செயல்படுகிறார்களா என்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai