சுடச்சுட

    

    புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 400 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சுனில்குமார் கெளதம் உத்தரவிட்டார்.
    புதுச்சேரியில் சட்டம்- ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் டி.ஜி.பி. சுனில்குமார் கௌதம் உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பண்டிகைக் காலங்களில் போலீஸார் கடைகளில் மாமூல் வாங்குவதாக புகார்கள் வந்தன. ஏற்கெனவே போலீஸார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்திருந்தார். இதைத் தடுக்கும் வகையில், புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்ட போலீஸாரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை புதுவை காவல் துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai