Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் மகன் கொலை வழக்கில் இரு சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் மகன் கொலை வழக்கில் இரு சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

    By DIN  |   Published on : 01st October 2017 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியாங்குப்பம் அருகே ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    குமரகுருபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் தெய்வநாயகம். இவரது மகன் அருள் (32). இவர், தனியார் பேருந்தில் பரிசோதகராகப் பணிபுரிந்து வந்தார்.
    இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள காலிமனை அருகே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கால்வாயில் கிடந்தார்.
    இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் ரங்கநாதன், காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப் படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர்.
    இந்த நிலையில், அரியாங்குப்பம் பிசிபி நகரைச் சேர்ந்த பாலாஜி (20), அதே பகுதி திரவுபதியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த பெருமாள் (19), சுதானா நகர் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (18) மற்றும் இரு சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
    கொலை செய்யப்பட்ட அருள் கடந்த 27-ஆம் தேதி இரவு பெண் ஒருவரை பைக்கில் அழைத்துக் கொண்டு பாலாஜி திரையரங்கம் அருகே சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த பெருமாள் மற்றும் 2 சிறுவர்கள் அருளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
    பின்னர், அருளுடன் வந்த பெண்ணை பெருமாள் தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
    இதனால் சிறுவர்களுக்கும், அருளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்தச் சிறுவர்களின் நண்பர்களான பாலாஜி, பெருமாள், சதீஷ்குமார் ஆகியோர் அங்கு வந்து அருளிடமிருந்து பணத்தைப் பறித்ததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
    அப்போது சிறுவர்கள் இருவரும் அருளை கல்லால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து அங்குள்ள வாய்க்காலில் அருளின் உடலை வீசிவிட்டு சென்றது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    இதையடுத்து இரு சிறுவர்கள் உள்பட 5 பேரையும் கைது செய்த அரியாங்குப்பம் போலீஸார் அவர்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் பாலாஜி, பெருமாள், சதீஷ்குமார் ஆகிய
    3 பேரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்கள் இருவரும் அரியாங்குப்பம் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai