சுடச்சுட

  

  புதுச்சேரியில் சீரடி சாய்பாபா மகா சமாதி தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
  புதுச்சேரி ஆம்பர் சாலையில் அமைந்துள்ள அட்சய சீரடி சாய்பாபா கோயிலில் 99-ஆம் ஆண்டு மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சாய் கணபதி சோடச தீப பூஜை, பஞ்சாட்சர தீப பூஜை, ஆரத்தி அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
  அதேபோல, லாஸ்பேட்டை சாய்பாபா கோயிலிலும் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சாய்பாபா சிலைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாய்பாபாவை தரிசித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai