சுடச்சுட

  

  திமுக சார்பில், அந்தக் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைப் பணிக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி லப்போர்த் வீதியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  கட்சியின் அவைத் தலைவர் சீத்தா.வேதநாயகம் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்து, கழக நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை வழங்கினார்.
  இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக் கழகத் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதா குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக் குழு உறுப்பினர்கள் மாறன், தட்சிணாமூர்த்தி, வேலவன், வேலன், அருட்செல்வி, தொகுதிச் செயலர்கள் சக்திவேல், உப்பளம் சக்திவேல், சீத்தாராமன், லோகு, ரவிச்சந்திரன், பாண்டு, அரிகிருஷ்ணன், கலியகார்த்திகேயன், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  கட்சியில் இணைப்பு: மணவெளி தொகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக இளைஞரணி அமைப்பாளர் லிங்கேஸ்வரன் தலைமையில், தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ஆதிதிராவிட நலக் குழு அமைப்பாளர் ராமகிருஷ்ணன், தொமுச தலைவர் அண்ணா அடைக்கலம், டி.என். பாளையம் ரவி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai