சுடச்சுட

  

  புதுச்சேரியைச் சேர்ந்த 27 தொண்டு நிறுவனங்களுக்கு ரூ. 4.46 கோடி நிதியுதவியை சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி சனிக்கிழமை வழங்கினார்.
  புதுவை அரசு சமூக நலத் துறையின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், தெருவோர குழந்தைகள் இல்லம், குழந்தைகள் தத்தெடுப்பு இல்லம் ஆகியவற்றை நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நிதியுதவி வழங்கப்படுகிறது.
  புதுவையில் சமூக நலத் துறை மூலம் உரிமம் பெற்று 57 தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
  இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 27 தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவியாக ரூ. 4.46 கோடிக்கான காசோலைகளை சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி வழங்கினார்.
  இதன் மூலம் 1,670 குழந்தைகள் பயன்பெறுவர். சமூக நலத் துறை இயக்குநர் கே.சாரங்கபாணி, கள அதிகாரி விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai