Enable Javscript for better performance
நதிகளை மீட்போம் இருசக்கர வாகனப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    ஈஷா யோகா மையம், புதுவை அரிமா சங்கம் ஆகியவை சார்பில் நதிகளைக் காப்போம் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
    'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' பேரணி கடந்த 3-ஆம் தேதி கோவையில் தொடங்கியது. இந்தப் பேரணி குமரி முதல் இமயம் வரை நாடெங்கிலும் நதிகளைக் காக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
    இதன் தொடர்ச்சியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரி அரிமா சங்கம், நதிகளை மீட்போம் இயக்கத்துடன் இணைந்து இருசக்கர வாகனப் பேரணியை நடத்தியது. ஆளுநர் மாளிகை நுழைவாயில் அருகே பேரணியை ஆளுநர் கிரண் பேடி தொடக்கி வைத்தார். புதுச்சேரி அரிமா சங்க ஆளுநர் பொன்னுராம் பரமகுரு, துணை ஆளுநர் எம். சரவணன், இரண்டாவது துணை ஆளுநர் கீதா கமலக்கண்ணன், நிர்வாகிகள் கண்ணன், ஜி. ஸ்ரீதரன், சின்னசாமி, பத்மநாபன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டு நதிகளை இணைப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai