நவராத்திரி விழா: பெண்கள் கும்மி, கோலாட்டம்
By DIN | Published on : 01st October 2017 05:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நவராத்திரியையொட்டி, ஸ்ரீ ஒப்பிலாமணியர் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு மார்வாடி பெண்கள் கும்மி, கோலாட்டம் ஆடி வழிபாடு செய்தனர்.
காரைக்கால் ஸ்ரீ ஒப்பிலாமணியர் கோயிலில் கடந்த செப். 21-ஆம் தேதி முதல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
காரைக்கால் பகுதியில் வசிக்கும் மார்வாடிக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, இக்கோயிலில் அம்மன் புகழ்பாடும் வகையில் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடுதல் மற்றும் பாட்டு, நடனம் உள்ளிட்டவைகளில் பங்கேற்றனர். இந்த வழிபாட்டில் சிறுமி முதல் பெரியோர் வரை 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நவராத்திரி 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு நிகழ்ச்சியில் பல மணி நேரம் ஈடுபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, வட மாநிலங்களில் நவராத்திரி நிகழ்ச்சி துர்கா பூஜையாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மகிஷாசூர சம்ஹாரம் 10-ஆம் நாள் நிறைவுபெற்ற பின்னரே நவராத்திரி உண்ணா நோன்பு முடிக்கப்படுகிறது என்றனர்.