சுடச்சுட

  

  நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி பாசிக் ஊழியர்கள் போராட்டம்

  By DIN  |   Published on : 01st October 2017 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அரசின் சார்பு நிறுவனமான பாசிக் ஊழியர்கள் சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, வெள்ளிக்கிழமை இயந்திரங்கள் போல அமர்ந்து, பூசையிட்டும் படையிலிட்டும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  பாசிக்கில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் கீழ், காய்கறி அங்காடிகள், மதுபானக் கடைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 39 மாத சம்பளத் தொகையை வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, சம்பளம் வழங்காமல் தங்களை இயந்திரங்கள் போல அரசு கருதுகிறது எனவும், தொழிலாளர்களின் நிலையை அரசுக்கு உணர்த்தும் வகையிலும் இயந்திரங்கள் போல தொழிலாளர்களை அமரவைத்து பூசையிட்டும் படையிலிட்டும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
  போராட்டத்துக்கு ஏஐடியுசிவின் மாநிலச் செயலர் கே.சேதுசெல்வம் தலைமை வகித்தார். பாசிக் தலைமை அலுவலக வாயிலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai