Enable Javscript for better performance
நோணாங்குப்பம் படகு குழாமில் அலைமோதிய கூட்டம்: டிக்கெட் வழங்காததால் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்- Dinamani

சுடச்சுட

    

    நோணாங்குப்பம் படகு குழாமில் அலைமோதிய கூட்டம்: டிக்கெட் வழங்காததால் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்

    By DIN  |   Published on : 01st October 2017 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கூட்டம் அலைமோதியதால் சனிக்கிழமை படகு சவாரிக்கான டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    நான்கு நாள்கள் தொடர் விடுமுறை என்பதால், புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக, நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    தற்போது அங்கு 6 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 180 பயணிகள் மட்டுமே படகு சவாரி செய்ய முடியும். ஆனால், வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக வந்ததால் முற்பகல் 12 மணியளவில் படகு சவாரிக்கான டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரியாங்குப்பம், தவளக்குப்பம் போலீஸார் அங்கு வந்து சுற்றுலா பயணிகளை சமாதானம் செய்தனர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: இங்கு போதிய ஆள்கள் இல்லை என கூறி, குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே இயக்கப்படுகின்றன. இதனால், நீண்ட நேரம் காத்திருந்தும் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். சுற்றுலா பயணிகள் நலன் கருதி விடுமுறை நாள்களில் கூடுதல் படகுகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai