Enable Javscript for better performance
பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி டிச. 22- இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில், வருகிற டிசம்பர் 22 முதல் 31 வரை 10 நாள்கள் இரண்டாவது பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
    கண்காட்சிக் குழுவின் தலைமைக் காப்பாளராக நீதிபதி தாவீது அன்னுசாமி, காப்பாளர்களாக அரசுக் கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன், வேல்.சொ.இசைக்கலைவன், வி.முத்து ஆகியோர் உள்ளனர்.
    பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக தி. ராமநாயகம் (மலேசியா), எம். இலியாஸ் (சிங்கப்பூர்), தெ. செந்தில்வேலவர் (இலங்கை), தேவரக்கா (மொரீசியஸ்) ஆகியோர் உள்ளனர்.
    தலைவராக பாஞ்.ராமலிங்கம், துணைத் தலைவர்களாக அப்துல் மஜீத், சீனுவாசன், செயலராக கோ. முருகன், இணைச் செயலர்களாக வீ.செல்வப்பெருமாள் ந. கோதண்டபாணி ஆகியோர் உள்ளனர்.
    தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக ஸ்டீபன் இன்பநாதன், ரெகனா பேகம் ஆகியோர் உள்ளனர்.
    இந்தக் கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மும்பை, தில்லி ஆகிய பகுதிகளிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 100 புத்தக வெளியீட்டு, விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
    சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.
    கண்காட்சியில் 10 நூல்கள் வெளியிடப்படுகின்றன. புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களுக்குத் தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் நூல்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
    கண்காட்சியில் அதிக அளவில் புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு 'புத்தக விரும்பி', 'புத்தக ராஜா', 'புத்தக ராணி', 'புத்தக மகாராஜா', 'புத்தக மகாராணி' உள்ளிட்ட விருதுகளும், எழுத்தாளர்களுக்கும், புத்தக நிறுவனங்களுக்கும் 'புத்தக சேவா ரத்னா' விருதும் வழங்கப்படும்.
    மேலும் விவரங்களுக்கு: புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கம், எண். 17, 14-ஆவது தெரு, கிருஷ்ணா நகர்,புதுச்சேரி- 605 008. தொலைபேசி: 0413 - 2212476, 89033 00609.
    கண்காட்சி முகவரி: வேல்.சொக்கநாதன் திருமண நிலையம், வள்ளலார் சாலை, புதுச்சேரி- 605 011. தொலைபேசி : 97878 45200 தொடர்பு கொள்ளலாம்.
    கலை - இலக்கியப் போட்டிகள்: புத்தகக் கண்காட்சியையொட்டி, பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சு, கவிதை, கட்டுரை, பாட்டு, இசை, நடனம், வினாடி - வினா, ஓவியம் உள்ளிட்ட கலை - இலக்கியப் போட்டிகள் நடைபெறும்.
    போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அது குறித்த விவரங்களை ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் பெயர்களை முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.
    தொடர்புக்கு: வி.முத்து, தலைவர், புதுவைச் தமிழ்ச் சங்கம். ஒருங்கிணைப்பாளர் வீ.செல்வப்பெருமாள் எண். 65, பஜனை மடத்து வீதி, மஞ்சினி நகர், முத்தியால்பேட்டை, புதுச்சேரி- 605 003. செல்லிடப்பேசி : 94869 48060.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai