Enable Javscript for better performance
பாண்டெக்ஸ் தீபாவளி கைத்தறி கண்காட்சி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள பாண்டெக்ஸ் விற்பனை அரங்கில் தீபாவளி கைத்தறி கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
    நிகழ்வுக்கு சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தலைமை வகித்தார். முதல்வர் வி.நாராயணசாமி கைத்தறி கண்காட்சியைத் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடக்கிவைத்தார். சிவா எம்.எல்.ஏ., புதுச்சேரி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சிவக்குமார், பாண்டெக்ஸ் மேலாண் இயக்குநர் பத்மாவதி, அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    இந்தக் கண்காட்சியில் மகளிருக்கான கைத்தறி சேலைகள், மென்மையான பெங்கால் பருத்திச் சேலைகள், கோவை பருத்தி சேலைகள், பாரம்பரியமிக்க பரமக்குடி சேலைகள், பேன்சி சேலைகள், கைத்தறி கைலி உள்ளிட்ட பல்வேறு ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் வரையில் 10 தவணைகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் விற்பனையும் உண்டு. இந்த தீபாவளி கைத்தறி கண்காட்சி அக்டோபர் 17-ஆம் தேதி வரை நடைபெறும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai