சுடச்சுட

  

  விஜயதசமியை முன்னிட்டு, புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் புதிதாகப் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
  கல்விக்குக் கடவுளான சரஸ்வதிக்கு குருவான ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமியில் புதிதாகப் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் எனும் கல்வித் தொடக்க விழா நடைபெறுவது வழக்கம்.
  அதன்படி, லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் கல்வித் தொடக்க நிகழ்ச்சியான அக்ஷராப்பியாசம் நிகழ்ச்சி நடைபெற்றது.
  இதில், திரளான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோயிலுக்கு வந்து நெல்லில் குழந்தைகளின் கையைப் பிடித்து 'அ' என்னும் எழுத்தை எழுதி கல்வியைத் தொடக்கி வைத்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai