சுடச்சுட

    

    அரசு தன்னாட்சி கல்வி நிறுவன ஊழியர்கள் பேரவையை முற்றுகையிட முயற்சி

    By DIN  |   Published on : 02nd October 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, புதுச்சேரி  அரசு தன்னாட்சி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் அல்லாத  ஊழியர்கள் புதன்கிழமை பேரணியாகச் சென்று சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்றனர்.
    7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஏற்கெனவே வழங்க வேண்டிய 6ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட அரசு தன்னாட்சி கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் சட்டப்பேரவை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்த பேரணியாக வந்தனர்.
    அவர்களை ஆம்பூர் சாலை சந்திப்பில் பேரணியை போலீஸார் தடுப்பு ஏற்படுத்தி தடுத்தனர். தடுப்பை மீறி ஊழியர்கள் செல்லமுயன்றதால் போலீஸாருக்கும் , ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை தடுத்து போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai