சுடச்சுட

  

  புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் ஆங்கில இலக்கியத் திருவிழா புதன்கிழமை  நடைபெற்றது.
  இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கட்டுரைப் போட்டியில் மாணவி மகமுதா சுக்ரா, கவிதைப் போட்டியில் மாணவி விஷ்ணுப்ரியா, விநாடி-வினாவில் மாணவி தீபா, பட்டிமன்றத்தில் மாணவிகள் பத்மாவதி, மகமுதா, இவாஞ்சலின், விஷ்ணுப்ரியா, மகமுதா சுக்ரா, ஓவியப் போட்டியில் அக்ஷயா, இலக்கிய காட்சி வடிவமைப்பு போட்டியில் ஆண்டியானா, ஜீன் செலஸ்டீன், ரதிபிரியா ஜோஸ்லின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
  இதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆங்கிலத் துறை தலைவர் ரசியா வரவேற்றார். விழாவின் முக்கியத்துவம் குறித்து பேராசிரியர் முருகன் பேசினார். கல்லூரி முதல்வர் பூங்காவனம் தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். துறை பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியை அமுதா நன்றி கூறினார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai