Enable Javscript for better performance
ஆளுநர் மாளிகை மக்கள் குறைகேட்பு மூலம் ஊழல்களுக்கான ஆதாரம் கிடைத்தது- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநர் மாளிகை மக்கள் குறைகேட்பு மூலம் ஊழல்களுக்கான ஆதாரம் கிடைத்தது

    By DIN  |   Published on : 02nd October 2017 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில், ஆளுநர் மாளிகை மூலம் நடத்தப்படும் மக்கள் குறைகேட்பு நிகழ்வு மூலம் ஊழல்களுக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
    இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவிட்டுள்ளதாவது: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நாள்தோறும் மக்களிடம் குறை கேட்பு நிகழ்ச்சி எந்தவொரு தடையுமின்றி, அரசின் அனைத்துத் துறையினருடனும் பொதுமக்களை இணைக்கிறது. அவர்களுக்கு  தகவல் கேட்கும் உரிமை அளிக்கிறது.
    மீண்டும் மீண்டும் ஒரே விஷயங்களுக்காகவும் கூட நடவடிக்கை கேட்க,  நேரடியாக வந்து கேட்க முடிகிறது. ஏழை மக்களுக்கு  தனது உரிமையை அறிய இது உதவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் கடைசி இடமாக, விரைவான பதிலை தரும் வகையில் ஆளுநர் செயலகம் இயங்குகிறது.  மருத்துவ இடங்களை நிரப்புவதில் நடந்த ஊழல், உயர்மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டதில் நடந்த ஊழல், பொதுப்பணிகளில் நடந்த ஊழல்கள், பொழுதுபோக்கு இடங்களில் நடந்த ஊழல்கள், சேவை விவகாரங்களில் நடந்த ஊழல்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடந்த ஊழல்களுக்கான  ஆதாரங்கள் கிடைத்து இருப்பதுதான் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் மக்கள் குறைகேட்பு நிகழ்வின் அம்சமாகவும், ஊழல்களை கண்காணிக்கவும் உதவியாகவும் உள்ளது. தற்போது ஊழல்களை குறைக்கவும், சேவைகளில் ஊக்கத்தை ஏற்படுத்தவும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் மக்கள் குறைகேட்பு நிகழ்வை பயன்படுத்திக் கொள்வதும், ஊழலை ஒழிப்பதும் மக்கள் கையில்தான் உள்ளது என அதில் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai