Enable Javscript for better performance
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு: சிவா எம்.எல்.ஏ. ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் பாதிப்பு குறித்து புதன்கிழமை சிவா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    புதுச்சேரியில் பெய்த மழை காரணமாக உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட சாந்தி நகர், இளங்கோ நகரை ஒட்டிச் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது.
    இது குறித்து அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. சிவா சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் பிளாஸ்டிக் பொருள்களை உடனடியாக அகற்றி கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
    இந்த ஆய்வின்போது, நகராட்சி உதவிப் பொறியாளர்கள் மலைவாசன், பிரபாகரன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் தேவதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai