Enable Javscript for better performance
கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 02nd October 2017 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, புதுச்சேரி, லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அனைத்து தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை ஆலை நுழைவுவாயில் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
    புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இதுவரை 33 ஆண்டுகள் கரும்பு அரைவையை நிறைவு செய்துள்ளது. கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 6 மாதங்கள் ஆலை நிர்வாகத்தால் ஊதியம் தரப்படாததால் அனைத்துத் தொழிலாளர்களும் வறுமையில் வாடி வருகின்றனர்.
    ஆலையில் உள்ள 166 நிரந்தர உள்பட 403 தொழிலாளர்கள் வாழ்க்கைக் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஊதிய உயர்வின்றி வேலை செய்து வருகின்றனர். கரும்பு அரைவை மூலம் வருவாய் கிடைத்தும் நிலுவை ஊதியம், இபிஎப், கூட்டுறவு கடன்கள், எல்ஐசி, பணிக்கொடை என மொத்தம் ரூ.27 கோடி நிலுவைத் தொகையை தரவில்லை.
    ஆலை நிர்வாகத்தின் தவறான செயல்பாட்டால் நலிவு ஏற்பட்டது. கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.20 கோடியை வழங்கி ஆலை அரைவையை உடனே தொடங்க வேண்டும். புதிய மேலாண் இயக்குநரை நியமிக்க வேண்டும், விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.
    இதில், மண்ணாடிப்பட்டு
    எம்.எல்.ஏ. டிபிஆர்.செல்வம் பங்கேற்றுப் பேசியதாவது: புதுச்சேரியில் காங்கிரஸ் பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை. மாறாக, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எதற்கெடுத்தாலும் ஆளுநர் தடையாக இருப்பதாகக் கூறி தப்ப நினைப்பது கண்டிக்கத்தக்கது. மக்களை ஏமாற்றும் செயல். கூட்டுறவு சர்க்கரை ஆலையை நடத்த முடியவில்லையென்றால் அரசை கலைத்து விட்டு சென்றுவிடலாம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai