சுடச்சுட

  

  தமிழை புறக்கணிப்பதாகக் கூறி ஹிந்தி பதாகைகள் கிழிப்பு: 30 பேர் கைது

  By DIN  |   Published on : 02nd October 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் மத்திய அரசு சார்பில் நடைபெற்று வரும் கலாசார விழாவில், தமிழ் மொழியை புறக்கணிப்பதாகக் கூறி,  ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை  கிழித்து எறிந்த தமிழ் அமைப்பைச் சேர்ந்த 30 பேரை போலீஸார் கைது செய்தனர் .
  மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை சார்பில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில்  கலாசார உணவுத் திருவிழா, கைவினைப் பொருள்கள் கண்காட்சி கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.
  கண்காட்சியை மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர்  முக்தார் அப்பாஸ் நக்வி, மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தொடக்கி வைத்தனர். இந்த விழா வருகிற 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  இந்த நிலையில், புதுச்சேரியில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியின் பெயர்ப்பலகை, விளம்பரப் பதாகைகள் தமிழ் மொழியை தவிர்த்து ஹிந்தி, ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பினர் கண்காட்சி நடைபெறும் இடத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கடற்கரைச் சாலைகளில் ஹிந்தி, ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை திடீரென கிழித்து எறிந்தனர்.
  அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுக்க முயன்றபோது, இரு தரப்பினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 30-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai