சுடச்சுட

  

  தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க பெண்கள் கிளை (பகுதி நேர ஊழியர்கள்) மாநாடு புதன்கிழமை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
  சங்கத் தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். செயலர் அந்தோணியம்மாள் வரவேற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார்.  தலைவர் சங்கரன், உதவித் தலைவர் கொளஞ்சியப்பன், மாநில அமைப்புச் செயலாளர் உஷா வாழ்த்திப் பேசினர். தலைவர் முருகையன் நிறைவுரை ஆற்றினார்.   
  2016-17-ம் ஆண்டுக்கான போனஸ் தொகை ரூ.7 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும். குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், இபிஎப், இஎஸ்ஐ தொகைகளை முறையாக பிடிக்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய தலைவராக ராணி, செயலாளராக அந்தோணியம்மாள் உள்பட பல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai