சுடச்சுட

    

    பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என புதுச்சேரி அரசின் நேரடி நியமன பயிற்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வக்குமார் கோரியுள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:  மத்திய அரசு ஊழியர்களான தில்லி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் 62 வயது வரை பணி செய்ய கடந்த 2007-ஆம் ஆண்டு  முதல் உத்தரவிடப்பட்டது. ஆனால், புதுவையில் பள்ளி ஆசிரியர்கள் பணிபுரியும் வயது 60-ஆக அனுமதிக்கப்பட்டுள்ளது.
    தில்லியில் 62 வயது வரை பணியாற்ற உத்தரவிட்டுள்ள நிலையில், அதை புதுவை மாநில் அரசும் அமல்படுத்த வேண்டும். ஆனால் அரசு  இதை மறுத்து வருகிறது.
    மத்திய அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு மட்டும் சலுகையை வழங்கிவிட்டு, மற்ற பிரிவினருக்கு அதை மறுப்பது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14-க்கு எதிரானதாகும். எனவே, மத்திய அரசில் பணிபுரியும் அனைத்துப் பிரிவு ஆசிரியர்களும் தில்லியை போலவே 62 வயது வரை பணி செய்ய உத்தரவிடக் கோரி மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து சென்னை மத்திய தீர்ப்பாயத்தில் இந்த மாதம் வழக்குத் தொடர ஆசிரியர்கள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai