Enable Javscript for better performance
பயிர் வாரியாக வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் சங்கத்தினர் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    பயிர் வாரியாக வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் சங்கத்தினர் மறியல்

    By DIN  |   Published on : 02nd October 2017 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிர் வாரியாக அரசு அறிவித்த வறட்சி நிவாரணத்தை அமல்படுத்தக் கோரி வில்லியனூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் அரசின் அறிவிப்பை காலம் கடத்தாமல் அமல்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாய, விவசாய தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக புதுச்சேரியில் தொடங்க வேண்டும். தீவன விலை உயர்வை அடுத்து பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வில்லியனூர் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசச் செயலாளர் வே.சங்கர் தலைமை தாங்கினார்.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலர் ஆர்.ராஜாங்கம் பேசினார். சங்க நிர்வாகிகள் முத்துலிங்கம், வடிவேல்,  அன்புமணி,  ராமசாமி,  விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகி கலிவரதன் உள்ளிட்ட திரளான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.  

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai