சுடச்சுட

  

  பாரதிதாசன் கல்லூரியில் கூடுதல் இடங்களுக்கு இன்று கலந்தாய்வு

  By DIN  |   Published on : 02nd October 2017 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் கூடுதலாகப் பெறப்பட்ட 430 சேர்க்கை இடங்களுக்கு வியாழக்கிழமை (செப்.28) கலந்தாய்வு நடைபெறுகிறது.
   புதுச்சேரியில் தாகூர் கல்லூரி, பாரதிதாசன் கல்லூரி, கலித்தீர்த்தாள்குப்பம் காமராஜர் கல்லூரி, தவளக்குப்பம் ராஜீவ் காந்தி கல்லூரி, கதிர்காமம் இந்திரா காந்தி கல்லூரி, வில்லியனூர் கஸ்தூரிபாய் கல்லூரி உள்ளிட்ட 6 கலைக்கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 2,830 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, கடந்த ஜூலை மாதம் முதல் பல கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்கள் நிரம்பின. இதனால் பல மாணவர்கள் இடம் கிடைக்காமல் தவித்து வந்தனர். இதையடுத்து பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உள்ள 12 பாடப்பிரிவுகளில் கூடுதலாக 430 இடங்கள் பெறப்பட்டன.
   இந்த நிலையில், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காத மாணவ, மாணவிகள், இதுவரை சேர்க்கை கிடைக்கப்பெறாதவர்கள் தங்களது பெயர்களை கபாஸ் அலுவலகத்தில் செப்.27ஆம் தேதி பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது.
  அதன்படி, புதன்கிழமை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உள்ள கபாஸ் அலுவலகத்தில் மாணவர்கள்  209 பேர், மாணவிகள் 592 பேர் என மொத்தம் 801 பேர் தங்களது பெயரைப் பதிவு செய்தனர்.
  அதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாரதிதாசன் கல்லூரியில், கூடுதலாகப் பெறப்பட்ட 430 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai