சுடச்சுட

    

    பாரதி பஞ்சாலை முன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 02nd October 2017 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி பாரதி பஞ்சாலை முன் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுவை சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலைகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்ற 127 பேருக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி ஆகியவை இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் முதல்வர் நாராயணசாமியிடம் முறையிட்டனர். அப்போது, பணிக்கொடை தொகை உடனடியாக வழங்கப்படும் என அவர் உறுதியளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். ஆளுநரிடம் முறையிட்டும் பலனில்லையாம்.
    இந்த நிலையில் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், அலுவலர்கள் ஒன்றிணைந்து பாரதி ஆலை மேலாளரைச் சந்தித்து முறையிட சென்றனர்.
    மேலாளர் அங்கு இல்லாததால் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்துசென்றனர். ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் அம்பிகாவதி, மாரிமுத்து, அய்யனார் ஆகியோர் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
    இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து கூறுகையில், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி கிடைக்காததால், இதுவரை 9 பேர் இறந்துள்ளனர்.  கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் உரிய பதில் கிடைக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai