Enable Javscript for better performance
புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளில் இணையம் மூலம் சொத்து வரி செலுத்தும் திட்டம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளில் இணையம் மூலம் சொத்து வரி செலுத்தும் திட்டம் தொடக்கம்

    By DIN  |   Published on : 02nd October 2017 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளில் சொத்து வரியை இணையம் மூலம் செலுத்தும் திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
    புதுவையில் சொத்து வரி கட்டணத்தை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி வந்த நிலையில், தற்போது உள்ளாட்சித் துறை நிர்வாகம் இணையதளம் மூலம் வரியை செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே சொத்து வரியை செலுத்தலாம்.
    எனவே, பொதுமக்கள், h‌t‌t‌p://‌p‌r‌o‌p‌e‌r‌t‌y‌t​a‌x.‌p‌d‌u‌d‌u​c‌h‌e‌r‌r‌y.‌g‌o‌v.‌i‌n என்ற இணைய தளத்துக்கு சென்று தங்களின் a‌x a‌s‌s‌e‌s‌s‌m‌e‌n‌t ‌n‌u‌m​b‌e‌r, ‌v‌e‌r‌i‌f‌i​c​a‌t‌i‌o‌n c‌o‌d‌e ஆகியவற்றை பதிவு செய்து டெபிட்/ கிரிடிட்/ நெட் பேங்க் மூலம் கட்டணத்தை செலுத்தி அதில் வரும் ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.
    இந்தத் திட்டத்துக்கான தொடக்க விழா புதுவை தலைமைச் செயலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, ஆன்லைன் மூலம் சொத்து வரி செலுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, புதுச்சேரி நகராட்சி (w‌w‌w.‌p‌d‌y.‌m‌u‌n.‌i‌n) மற்றும் உழவர் நகராட்சிக்கான (w‌w‌w.‌o‌u‌l‌m‌u‌n.‌i‌n) இணைய தளத்தை தொடக்கி வைத்து அவர் பேசியதாவது: புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளில் சொத்து வரி செலுத்தும் பொதுமக்கள், அதனை ஆன் லைன் மூலம் செலுத்தும் வசதி உள்ளாட்சித் துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சொத்து வரியை செலுத்துவதற்கு தேவையில்லாமல் அலைய வேண்டிய வேலை இருக்காது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம் மற்றும் காலநேரத்தை குறைப்பதாக இந்த வசதியை கொண்டு வந்துள்ளோம். இந்த வசதி கொம்யூன் பஞ்சாயத்திலும் விரைவில் தொடங்கப்படும். இதுமட்டுமல்லாமல் செல்போன் மூலம் வரி செலுத்தும் திட்டமும் விரைவில் கொண்டுவரப்படும்.
    கடந்த வாரம் பறக்கும் கேமரா மூலம் சொத்துகளை மதிப்பீடு செய்யும் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
    மேலும், புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு என்று தனியாக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 45 ஆயிரம் கட்டடங்களும், உழவர்கரை நகராட்சியில் 55 ஆயிரம் கட்டடங்களும் உள்ளன. இதில் சொத்து வரியாக புதுச்சேரி நகராட்சிக்கு ரூ.9 கோடியும், உழவர்கரை நகராட்சிக்கு ரூ.6 கோடியும் வந்துள்ளது. நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
    தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆன்லைன் வசதி மூலம் எவ்வளவு வரி வசூலானது என்ற தகவலையும் எளிதாக கண்காணிக்க முடியும். நகராட்சிக்கு சட்ட விதிப்படி கல்வி நிறுவனம், தொண்டு நிறுவன கட்டடங்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்த கட்டடங்களுக்கும் சொத்து வரி வசூலிக்க முடிவு செய்துள்ளோம். அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும் சொத்து வரி வசூலிக்கப்படும் என்றார்.
    இந்த நிகழ்ச்சியில் அரசு செயலர் ஜவகர், உள்ளாட்சித்துறை இயக்குநர் முகமது மன்சூர், தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குநர் மலர்க்கண்ணன், புதுவை நகராட்சி ஆணையர் கணேசன், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai